பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் அடாவடி பேச்சு!
Pakistan Prime Minister Shehbaz Sharif speaks again of hostility
இந்தியாவுக்கு மீண்டும் பாடம் கற்பிக்கப்படும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடாவடியாக பேசியுள்ளர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகங்களை அளித்தது.இதையடுத்து இரு நாடுகளும் சண்டையை நிறுத்தியது.
இந்தநிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தன், இந்தியவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. , சிந்து நதி, குடும்ப சொத்து அல்ல. பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம் என அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து இருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் பேசினார்.
இதேபோல , நேற்று “நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரதமர் மோடிக்கும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக நாம் ஒன்றுபட்ட மக்களாக, ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம். மீண்டும் போர் ஏற்பட்டால் சிந்து நதி உள்பட ஆறு நதிகளையும் மீட்போம்” என்று பாகிஸ்தான் வெளியுறவு முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இந்தநிலையில் பகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுத்தால், இந்தியா ஒரு துளி தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம். இந்தியாவுக்கு மீண்டும் பாடம் கற்பிக்கப்படும்” என்று அடாவடியாக பேசியுள்ளர்.
English Summary
Pakistan Prime Minister Shehbaz Sharif speaks again of hostility