வேன்- லாரி மோதி விபத்து: 10 பேர் பலியான சோகம்!
Vanlorry collision accident 10 people have died tragically
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் ஓட்டுநர்கள் கவனக்குறைவாக இயக்குவதால் நடைபெறுகிறது ,பெரும்பாலான விபத்துகள் இரவு நேரங்களில் நடக்கிறது. அதற்கு காரணம் ஓட்டுநர்கள் இரவு ஓட்டும்போது சீரான வேகத்தில் செல்லுமாறு ஒரு சில ஓட்டுனர்கள் அதிவேகமாக செல்வதும் முன் செல்லும் வாகனங்களை முந்தி செல்ல முயலும் போதும் சில விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது கவனக்குறைவால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கதுஷ்யாம்ஜி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேன் வீடு திரும்பி கொண்டிருந்த போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் விபத்து நடைபெற்றுள்ளதால், தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
Vanlorry collision accident 10 people have died tragically