பருவநிலை மாற்றம்.. கடல் மட்டம் உயர்வால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பேராபத்து.! - Seithipunal
Seithipunal


பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் 'நேச்சர் கிளைமேட் சேஞ்ச்' பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில் உலகம் முழுவதும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த நூற்றாண்டில் கடல் மட்ட உயர்வால் ஆசியாவின் சில பெரு நகரங்கள், மேற்கு வெப்ப மண்டல பசிபிக் தீவுகள் மற்றும் மேற்கு இந்திய பெருங்கடலை அதிக அளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பருவநிலை மாற்றத்தால் மட்டும் சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை உயரும். அதன் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதில் ஆசிய கண்டத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்ட உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும்.

மேலும், வரும் 2100 ஆம் ஆண்டுக்குள் கடுமையான பேராபத்து ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசியாவில் உள்ள யாங்கூன், பாங்காக் ஹோஷிமின் சிட்டி மற்றும் மணிலா நகரங்கள் வெள்ளத்தில் மோகம் பேராபத்தில் உள்ளன.

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரு நிகழ்வுகளின் கூட்டு விளைவு காரணமாக ஏற்படும் பாதிப்பை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய முக்கிய நகரங்களில் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Climate change Sea level rise will affect cities including Chennai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->