காது கேளாமைக்கு காரணங்கள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் இதோ...! - Seithipunal
Seithipunal


காது கேளாமை ஏற்படக் காரணங்கள் :
ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது ஜவ்வுப் பகுதியில் மெழுகு போன்ற படலம் ஏற்பட்டு ஒலிகளைத் தடுக்கும். சீழ் அல்லது மெழுகு போன்ற பொருள் காதுக் குழாயில் உருவாவதால் குறுகிய கால செவிடு ஏற்படலாம். 
பஞ்சு போன்ற வெளிப்புற பொருட்கள் அடைப்பால் காது கேளாமல் போகும் வாய்ப்புண்டு. பொதுவாக சளி, ப்ளூ போன்ற காய்ச்சல் அல்லது ஒவ்வாமை நோய்கள் காரணமாகவும் தற்காலிகமாக காதுகேளாமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டு. 
வெளிப்புறக் காதில் ஏற்படும் தொற்று அல்லது நடுப்புற காதில் ஏற்படும் தொற்று, சலம் அல்லது திரவம் வடிதல் ஆகியவற்றாலும் செவிப்பறையில் ஒலி கேட்பது பாதிக்கப்படலாம். 
அமினோகிளைகோசிடிஸ் போன்ற சில மாத்திரைகள் சாப்பிடுவது கூட தற்காலிகமாக காது கேளாத நிலையை ஏற்படுத்தி விடும். வைரஸ் மற்றும் சிற்றம்மை நோய் போன்றவை இந்நோய்களில் அடங்கும். 
கடுமையான மஞ்சள் காமாலை நோய் கூட சில நேரங்களில் காதுகேளாமையை ஏற்படுத்தும்.
இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

காதுகேளாமை வராமல் தடுக்கும் முறைகள் :
காது குடைவது கூடாது. அடிக்கடி காபி குடிப்பதைக் குறைக்க வேண்டும். அதிகமாக குளிபானங்கள் பயன்படுத்தக்கூடாது. 
புகைப்பிடித்தலை தவிர்த்தல் வேண்டும். உணவில் உள்ள உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.
சிலரது குருதியில் Zinc ன் அளவு குறைவாக இருப்பதுண்டு. அத்தகையவர்களுக்கு Zinc மாத்திரைகள் உதவலாம். 
உங்கள் வேலைத்தளம் அதீத இரைச்சல் உடையதாயின் அச்சத்தங்கள் உங்கள் காதுகளைப் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும். அத்தருணங்களில் அதைக் குறைப்பதற்கான இயர் பிளக் உபயோகிப்பது நல்லது.
இசை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், காதுகளை பாதிக்கும். ஹெயர் ரையர், நீரியக்கும் இயந்திரம், மிக்ஸிகள் போன்ற உபகரணங்களுடன் உங்கள் ரேடியோ, தொலைக் காட்சி, மொபைல் போன்றவற்றை குறைவான அதிர்வுகளை கொண்டு பயன்படுத்த வேண்டும். உயர் இரத்த அழுத்தம் மற்றொரு காரணம். எனவே அவற்றிற்காக மருத்துவர் தரும் மருந்துகளை வேளை தவறாது உட்கொள்வதும் அவசியம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Here are causes hearing loss and ways prevent


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->