மீண்டும் டெல்லி சென்ற சிவகுமார்; 'அவர் போகட்டும். எனக்கு போன் வந்தால்தான் நான் போவேன்' என்கிறார் சித்தராமையா; என்னதான் நடக்குது அங்கே.?
Karnataka Deputy Chief Minister Shivakumar went to Delhi
கர்நாடகாவில் முதல்வர் பதவி பங்கீடு குறித்த விவகாரத்தில் சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையேயான முரண்பாடு நீடிக்கும் நிலையில், தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் டில்லி தலைமை இந்த விவகாரத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது. இந் நிலையில், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மீண்டும் டில்லி சென்றுள்ளார். இது குறித்து பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதது:
திருமண விழாவுக்காக டில்லி செல்வதாகவும், நாளைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் திரும்பி விடுவேன் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், டிசம்பர் 14-ஆ ம் தேதி நாங்கள் ராம்லீலா மைதானத்தில் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அங்கும் செல்லவுள்ளதாகவும், அதற்காக, கர்நாடகாவிலிருந்து டில்லி செல்ல குறைந்தது 300 பேர் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் ஓட்டுரிமை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், குறித்த ஏற்பாடுகளைப் பார்க்க நான் அங்கு செல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

நாளை (டிசம்பர் 04) காலை அமைச்சரவைக் கூட்டத்திற்குத் திரும்புவதக்கவும், திருமணத்தில் கலந்துகொள்வதோடு, 2-3 சிறிய கூட்டங்களிலும் கலந்துகொண்டுவிட்டு கர்நாடகா திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கையில் அணிந்திருந்த ஆடம்பர கைக்கடிகார குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ''என் கையில் உள்ள கடிகாரம் நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கியது. எனது சொந்த கடிகாரம் . 07 ஆண்டுகளுக்கு முன்பே, என் கிரெடிட் கார்டிலிருந்து ரூ.24 லட்சம் செலுத்தினேன், அதை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
என்னுடைய தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் நான் ஒரு விலையுயர்ந்த கடிகாரத்தை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளேன். என் தந்தைக்கு 07 கடிகாரங்கள் இருந்தன, அவர் இறந்த பிறகு, அவை என் சகோதரனுக்கும் எனக்கும் சொந்தமானது.'' என்று நிருபர்களிடம் சிவகுமார் பேட்டி அளித்தார். இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''அவர் போகட்டும். எனக்கு போன் வந்தால் தான் நான் போவேன். இதுவரை எனக்கு போன் வரவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Karnataka Deputy Chief Minister Shivakumar went to Delhi