டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ள ஓ. பன்னீர்செல்வம் பேட்டி..!
OPS met Union Home Minister Amit Shah in Delhi
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும், தேவைப்பட்டால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசுவேன் என்றும் டில்லி சென்று விட்டு திரும்பிய நிலையில், பேட்டியளித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பாஜ கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த அவர், லோக்சபா தேர்தலில், பாஜ கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், அதிமுக பாஜ கூட்டணியில் அவரையும், தினகரனையும் சேர்க்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மறுத்துவிட்டதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் பாஜ கூட்டணியில் இருந்து விலகினர்.
அதன் பின்னர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றியுள்ளார். அத்துடன், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என இபிஎஸ்க்கு கெடு விதித்த அவர், தவறினால் புதிய கட்சியை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திடீர் பயணமாக நேற்று டில்லி சென்றார். அப்போது, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்கவும், சட்ட ஆலோசனை பெறவும், டில்லி சென்றுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இன்று டில்லி சென்று விட்டு சென்னை திரும்பிய ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது: ''டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தேவைப்பட்டால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவருடன் ஆலோசனை நடத்துவேன்.'' என்று கூறியுள்ளார்.
English Summary
OPS met Union Home Minister Amit Shah in Delhi