தன்னம்பிக்கை தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துகிறது; கேரளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!
Self confidence strengthens national security says President Draupadi Murmu in Kerala
கேரளாவின் திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில், கடற்படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில் கூறியதாவது: கடற்படை உள்நாட்டு தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தும் என்றும், வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு பங்களிக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன், தன்னம்பிக்கை தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துகிறதாகவும், கப்பல் கட்டுபவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம், மாலுமிகளை ஆதரிக்கிறோம். நமது கடல்களின் பாதுகாப்பிற்கு இந்திய கடற்படை முக்கிய பங்களிப்பாளராக நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அச்சுறுத்தல்களைத் தடுப்பதில் இருந்து கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடுவது வரை கடற்படையின் பங்கு பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்தியக் கடற்படையின் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தேசத்திற்கு ஆற்றிய சேவையைப் பற்றி இந்திய மக்கள் பெருமைப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உங்கள் ஒவ்வொருவரையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும், தேசபக்திக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Self confidence strengthens national security says President Draupadi Murmu in Kerala