காலை உணவுத் திட்டம்..மேயர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்!
Breakfast planMayor Muthuthurai inaugurated it
காரைக்குடி அழகப்பா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் கார்த்திகேயன் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை மேயர் சே.முத்துத்துரை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 25.08.2023 மற்றும் 15.07.2024 அன்று இத்திட்டமானது முறையே தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நகர்புற பகுதிகளில் உள்ள 3415 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3.05 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவாக்கம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
சென்னை மயிலாப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ஆங்காங்கே தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் கார்த்திகேயன் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேயர் சே.முத்துத்துரை கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் என்.சங்கரன் தலைமை ஏற்றார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Breakfast planMayor Muthuthurai inaugurated it