ஆசிரியருடன் எஸ்கேப் ஆன +2 மாணவி..! ஜோடியாக காவல் நிலையத்தில் சரண்.. பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு..!
Class 12th student and teacher love issue in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்த ராஜன் ஆண்டனி போஸ்க்கு 32 வயதாகும் நிலையில் அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் பொதுத் தேர்வு முடித்து விட்டு கல்லூரி சேர இருந்த மாணவியுடன் ஆசிரியர் எஸ்கேப் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மாணவியை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே ஆங்கில ஆசிரியரும், மாணவியும் நாகர்கோவில் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காவல்நிலையம் வந்த இரு வீட்டாரிடமும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலில் படிக்க வைப்பதாகவும், அதன் பின்பு ஆசிரியருக்கே திருமணம் செய்து வைப்பதாகவும் மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு வீட்டாரிடமிருந்து கடிதம் எழுதி வாங்கிய போலீசார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Class 12th student and teacher love issue in kanniyakumari