ஜஸ்ட் ஒரு கிளிக்., மொத்தமா சோலி முடிஞ்சுடும்.! சென்னை காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை.! மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


‘பார்ட் டைம்’ வேலை செய்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று, எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி நடந்து வருவது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த சில நாட்களுக்கு பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு பிரபல நிறுவனங்களில் ‘பார்ட் டைம்’ (பகுதி நேர) வேலை செய்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று குறுந்தகவல் மோசடி நபர்களால் அனுப்பப்பட்டு வருகிறது.

அதில், ‘வாட்ஸ்-அப்’ குரூப்பில் இணைவதற்கான ஒரு லிங்க்கும் அனுப்பப்படுகிறது. அதனை ‘கிளிக்’ செய்தவுடன் ஒரு ‘ஆப்’ பதிவேற்றம் ஆகிறது. இந்த ஆப்பில் இருந்து ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறி, பண மோசடி நடக்கிறது. எனவே இந்த ‘ஆப்'களை (honey, making) பதிவேற்றம் செய்திருந்தாலோ அல்லது இதுபோன்ற வேறு பெயரில் உள்ள ஆப்களில் பணம் முதலீடு செய்திருந்தாலோ அதனை உடனடியாக கைவிட வேண்டும்.

மேற்கொண்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதுபோன்று பகுதி நேர வேலை என்று எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அணுகும் மோசடி நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் வரும் எந்தவித லிங்கையும் கிளிக் செய்யக்கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்." என்று அந்த செய்தி குறிப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CHNNAI POLICE WARN FOR SMS ROBBERY ISSUE


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->