சென்னையில் பாராட்டு விழா; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக தமிழகம் திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டதற்கு பின்னர்,அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 

அதன்படி, 02 முறை தள்ளிப்போன பாராட்டு விழா  இன்று சென்னையில் நடைபெற்றது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ஆர். முதல் முறையாக இன்று சென்னை வந்தார். அவருக்கு தமிழக பா.ஜ.க. கட்சியினரும் சென்னை குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

இன்று மாலை 05 மணி அளவில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் கலைவாணர் அரங்கில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது, இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமை தாங்கியதோடு,  எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர், சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vice President CP Radhakrishnan and Edappadi Palanisamy met at the felicitation ceremony


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->