கொல்கத்தா அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான்; 'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலையும், கிரிக்கெட்டையும் தொடர்பு படுத்தக்கூடாது': ஷாருக்கானுக்கு ஆதரவாக சசி தரூர்..!
Shashi Tharoor supports Shah Rukh Khan stating that the attacks on Hindus in Bangladesh should not be linked to cricket
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 03 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, இரண்டு நாட்களுக்கு முன் மற்றுமொருவர் தீ வைக்கட்டு, ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்த சூழலில் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை , 19வது ஐ.பி.எல் தொடருக்காக ஷாருக்கானின் கோல்கட்டா அணி ஏலத்தில் எடுத்துள்ளமைக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர் கூறியுள்ளதாவது;
வங்கதேசத்தில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவத்தை கிரிக்கெட் உடன் தொடர்புபடுத்தக்கூடாது என்று கூறியுள்ளார். அத்துடன், சில விஷயங்களை தொடர்புபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் சரியானதைச் செய்யுமாறு வங்கதேசத்தை வலியுறுத்துகிறோம். இது தொடர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒரு கிரிக்கெட் வீரர். வஙகதேசத்தில் நடப்பதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்புப் பேச்சு அல்லது தாக்குதல்களையும் ஊக்குவித்ததாகவோ அல்லது ஆதரித்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. எனவே இரண்டையும் கலப்பது நியாயம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நமது அண்டை நாடுகள் அனைத்தையும் தனிமைப்படுத்தும் நாடாக நாம் மாறினால், அவர்களில் எவருடனும் யாரும் விளையாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இது எப்படி பிறகு நன்மை பயக்கும். இது முற்றிலும் விளையாட்டு முடிவு. இதில் அரசியல் வர அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அத்துடன், நாம் மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தை சூழ்ந்துள்ளோம். அவர்களை தனிமைப்படுத்த முடியாது. அவர்களுடன் விளையாட வேண்டும் என்று சசி தருர் தெரிவித்துள்ளார்.
English Summary
Shashi Tharoor supports Shah Rukh Khan stating that the attacks on Hindus in Bangladesh should not be linked to cricket