உமர் காலித்துக்கு மம்தானி கடிதம்; 'இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்': பாஜக எச்சரிக்கை..!
The BJP warns Mamdani that it will not tolerate interference in Indias internal affairs
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, திருக்குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து நேற்று பதவியேற்றார். இந்த மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது பேசி இருந்தார். பின்னர் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் சுமுகமாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 05 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு மம்தானி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில் அவர், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரேனும் தலையிட்டால் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என பாஜக கடுமையாக எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளதாவது: "இந்திய இறையாண்மைக்கு சவால் ஏற்பட்டால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 140 கோடி மக்களும் ஒன்றிணைந்து நிற்பார்கள். இந்திய மக்கள் நாட்டின் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The BJP warns Mamdani that it will not tolerate interference in Indias internal affairs