#தமிழகம் || பிளாஸ்டிக் பை விழுங்கிய குழந்தை மரணம்.! பெற்றோர்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே உள்ள துரைச்சாமி புறம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவரது மனைவி ஈஸ்வரி. 

இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை கலைக்கதிர், மசால் பொடியின் நுனியை வெட்டிய நெகிழிப்பைத் துண்டை விழுங்கி உள்ளான். உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து உள்ளது. 

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் மாறனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

child swallowed plastic bag died Parents beware


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->