15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் போக்சோவில் கைது.!
Child marriage in Sivakasi
சிவகாசி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் நடைபெற்ற குழந்தைகள் திருமணம் குறித்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் திருமணம் செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது இருவரும் காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பிரித்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர். சிறுமியை மகளிர் விடுதியில் சேர்த்தனர்.
English Summary
Child marriage in Sivakasi