தமிழகத்தில் அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நவடிக்கை: முதலமைச்சர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நவடிக்கைகளை் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய 05 உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

இதில், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உடல்நலம் பாதித்து சாலைகளில் திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister order for new measures to prevent the increasing incidents of dog bites in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->