80-வது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


80-வது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வாழ்த்து.!

'அன்னக்கிளி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தற்போது, இவர் இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். 

பல விருதுகளை வென்று குவித்த இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்தநாளை ஒட்டி இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் நேரிலும் சென்று வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இளையராஜாவின் பிறந்தநாள் விழா இன்று அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதலமைச்சருடன் சென்ற மூத்த அமைச்சர்கள், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin birthday wishes to music director ilaiyara


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->