#BigBreaking | விசாரணை கைதி இராயப்பன் ஷாஜி ஆண்டனி 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை - சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!
chennai rayappan antony suicide
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இராயப்பன் ஷாஜி ஆண்டனி, 48 கிலோ மீட்டர் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்திய வழக்கில், சென்னை சோழவரம் அருகே மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இராயப்பன் ஷாஜி ஆண்டனியிடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போதே, மூன்றாவது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து குதித்த இராயப்பன் ஷாஜி ஆண்டனியை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இராயப்பன் ஷாஜி ஆண்டனி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணை கைதி இராயப்பன் ஷாஜி ஆண்டனி மரணம் குறித்து திருமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடமும், உறவினரிடமும் தெரிவித்துவிட்டு, இராயப்பன் ஷாஜி ஆண்டனி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தான் போதை பொருள் கடத்தி கைது செய்யப்பட்ட விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்று நினைத்த இராயப்பன் ஷாஜி ஆண்டனி, இன்று அதிகாலை போலீசார் விசாரணையின் போது திடீரென மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதா தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
chennai rayappan antony suicide