சென்னையை புரட்டிப்போட்ட மழை! மரம் முறிந்து விழுந்து விபத்து!  - Seithipunal
Seithipunal


காலை முதலே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. 

ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

மதுரவாயல், பூந்தமல்லி, போரூர் ஆலப்பாக்கம், வாலாஜாபேட்டை, சோளிங்கர், கலவை, நெமிலி அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

விபத்து : 

இந்நிலையில், தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் அருகே மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை போலீசார் சரிசெய்தனர்.

இதேபோல், மரம் முறிந்து ரயில்வே மின்சார கம்பியில் விழுந்ததால், விரைவு ரயில்கள் தாமதமாக செல்கின்றன.

கனமழையால் செங்கல்பட்டு ஒத்திவாக்கத்தில், ரயில்வே மின்சார கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது.

இதன் காரணமாக முத்து நகர், அனந்தபுரி விரைவு ரயில்கள் உட்பட 4 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 20 நிமிடம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன. 

மழை தொடருமா? 

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Rain and some Accident 21092023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->