பிங்க் வாட்சப் தொடர்பாக உச்சகட்ட எச்சரிக்கை.. ஹேக்கிங் ஆபத்து - சென்னை மாநகர காவல்துறை.!
Chennai Police Warning about Pink WhatsApp Link Hacking Your Mobiles
பின்க் வாட்ஸ் அப் என்ற பெயரில் பரவி வரும் லிங்கில், அலைபேசிகள் ஹேக்கிங் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வாட்சப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளில் பிங்க் வாட்சப் என்ற செயலின் லிங்க் பகிரப்பட்டு வந்தது. மேலும், இது தொடர்பான லிங்கில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்றும், இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான லிங்கை கிளிக் செய்தால் அல்லது பரப்பினால் நமது அலைபேசி ஹேக்கிங் செய்யப்படும் என்று சென்னை மாநகர சைபர் கிரைம் காவல்துறை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புதுவகை வைரஸ் நமது அலைபேசியில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பிற தகவல்களை திருடிவிடும் என்றும் சென்னை மாநகர காவல் அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர். இதுபோன்ற லிங்குகளை யாரும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம் என்றும், லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Police Warning about Pink WhatsApp Link Hacking Your Mobiles