சென்னை: காதலிக்க மறுத்த 9ஆம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து வெட்டிய நாடக காதலன்! அடுத்தடுத்து நடந்த கொடூரம்!
Chennai pallavaram school girl attempt murder Drama love
சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு, பெயிண்டர் தொழிலாளி ஒருவர் திடீரென வந்து, சிறுமியை காதலிப்பதாக கூறி உடனே திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் சிறுமி மற்றும் அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு, தாயும் கண்டித்ததால், கோபம் அடைந்த அந்த நபர் திடீரென கத்தியை எடுத்துக் கொண்டு சிறுமியின் கையை வெட்டியுள்ளார். அதிர்ச்சியில் தாய் கத்தி கதறி அழ, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்த நபர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இருவரும் ரத்தக் குளத்தில் கிடந்த நிலையில் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது சிறுமியும், அந்த பெயிண்டரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chennai pallavaram school girl attempt murder Drama love