ஹிந்து போல நடித்து 12 பெண்களிடம் மோசடி... இஸ்லாமிய இளைஞர் கைது!!
UP Islam boy hindu love marriage forgery
உத்தரப் பிரதேசம் வாரணாசியில், ஹிந்து என்று போலியாக அடையாளம் காட்டி பெண்களை ஏமாற்றி வந்த இஸ்லாமிய இளைஞர் ஷராஃப் ரிஸ்வி கைது செய்யப்பட்டார்.
ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ரிஸ்வி குறைந்தது 12 பெண்களை ஏமாற்றியிருப்பதை விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் சாம்ராட் சிங், விஜய்குமார், அஜய்குமார் போன்ற பெயர்களில் கணக்குகள் உருவாக்கி, குறிப்பாக திருமண உதவிமைய தளங்களில் பெண்களை குறிவைத்து பழகியுள்ளார்.
முதலில் நட்பை வளர்த்து, பின்னர் தன்னை தொழிலதிபர், பணக்காரர் என சித்தரித்துள்ளார். வாடகைக் கார், விலையுயர்ந்த ஆடைகள் என போலியான வாழ்க்கைமுறையைக் காட்டி, பெண்களின் குடும்பத்தினரையும் ஏமாற்றியுள்ளார்.
விடியோ காலில் தனது நண்பர்களை குடும்பத்தினராக அறிமுகப்படுத்தி நம்ப வைத்த சம்பவங்களும் வெளிச்சமிட்டுள்ளன.
இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அவர் பெண்களிடம் ரூ.5 லட்சம் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு முன் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளார்.
அவரது மோசடியில் சிக்கிய பெண்களில் ஒருவர் புகார் அளித்ததால், ரிஸ்வியின் மோசடி வலையமைப்பு வெளிப்பட்டது. தற்போது, அவரது கட்டாய மதமாற்ற முயற்சி குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
UP Islam boy hindu love marriage forgery