அமலாக்கத்துறையின் 9 மணிநேர ரெய்டு முடிந்தது! திமுக அமைச்சர் வீட்டில் சிக்கியது என்ன?
DMK Minister I Periyasamy ED Raid over
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சுமார் 9 மணி நேரத்துக்குப் பிறகு முடிவடைந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களும், டிஜிட்டல் சாதனங்களும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி வழக்கின் பேரில் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள ஐ. பெரியசாமி வீடுகள் மீது ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். சென்னையின் பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லம் மற்றும் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
இதனுடன், திண்டுக்கல் மாவட்ட துரைராஜ் நகரில் உள்ள அவரது வீட்டிலும், அங்கு உள்ள பிற தொடர்புடைய இடங்களிலும் தேடுதல் நடைபெற்றது. மேலும், திண்டுக்கல் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான அவரது மகன் ஜ. பி. செந்தில்குமார் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதாகும்.
சோதனை முடிவடைந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாதனங்கள் மூலம் விசாரணை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
DMK Minister I Periyasamy ED Raid over