மறந்து கூட இப்படி செஞ்சுடாதீங்க... வெற்றிலை பாக்கு வைக்கும் திசை...!
Dont even forget to do this direction betel nut
நமது பூஜை அறையில் எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் வெற்றிலை பாக்கு மிக அவசியமாக அங்கே வைக்க வேண்டும்.இதில் வெற்றி பாக்கு இல்லாத பூஜையை சுவாமி ஏற்றுக்கொள்வது கிடையாது என்று பலர் சொல்கின்றனர். வெற்றிலை பாக்கை யார்வேண்டுமானாலும் வாங்கி வைத்து வழிபடலாம்.
வெற்றிலை பாக்கு முக்கியத்துவம் :
பாக்கு என்பது சிவனாகவும்,வெற்றிலை என்பது பார்வதி தேவியாகவும் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.எனவே வெற்றிலையையும் பாக்கையும் எப்பவுமே பிரிக்கக் கூடாது என்று சொல்கின்றனர்.

மேலும் இந்த வெற்றிலை இருக்கும் வீடுகளில் அமங்கல நிகழ்வுகளை தடுக்கப்படும். மேலும்,வெற்றிலையில் முப்பெரும் தேவர்களும் முப்பெரும் தேவியர்களும் வாசம் செய்கிறார்கள்.ஆகையால்,வெற்றிலை பாக்கை வைக்கும் போது தேவர்களுடன் தேவியர்களும் நம் வீட்டில் குடிகொள்வர் என்பது ஐதீகம்.
நாம் சுபகாரியங்கள் செய்யும் பொழுது கவனித்து இருப்போம் தேங்காய் பழம் என்று தட்டு நிறைய எத்தனை பொருட்கள் இருந்தாலும் தட்டில் வெற்றிலை பாக்கு இல்லை என்றால் அது முழுமை அடையாது என்று இன்றும் சொல்லப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த வெற்றிலை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதுபல சந்தேகம் இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம், வாழை இலை.
அதாவது வாழை இலையை வைக்கும்பொழுது நுனியை நமக்கு இடது புறத்திலும் அடி பாகத்தை வலது புறத்திலும் வைப்பர்.
அது போல்தான் வெற்றிலையிலும் நுனி பகுதி, காம்பு (அடி) பகுதி என உள்ளது. எனவே நுனி பகுதியை சுவாமிக்கு வைக்கும்போது அவருக்கு இடது புறத்திலும் அடி பகுதியை வலது புறத்திலும் வைக்க வேண்டும்.இதே யாருக்காவது தாம்பூலமாக கொடுக்கும்போது எதிரெதிரே நின்றுதான் கொடுப்போம்.
அப்போது யாருக்கு கொடுக்கிறீர்களோ அவர்களுக்கு இடது புறத்தில் நுனியும் வலது புறத்தில் அடியும் இருப்பதுபோல் கொடுக்க வேண்டும்.இதுதான் வெற்றிலையை பயன்படுத்தும் முறை என்று பலரும் தெரிவிப்பர். அதன் இத்தனை ஆண்டு காலமாக பின்பற்றியும் வருகின்றனர்.
English Summary
Dont even forget to do this direction betel nut