எட்டு வகையான கிருஷ்ணர் வழிபாடு... இதனை பின்பற்றி வழிபட்டால் அனுதினமும் நன்மைகள் உண்டாகும்...! - Seithipunal
Seithipunal


கோவர்த்தனதாரி:
முதலில்,தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி நிற்கும் கிருஷ்ண பகவான். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் உள்ள பணக்கஷ்டங்கள் விலகுகின்றது.
ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):
ராதையுடன் நின்று காட்சி கொடுக்கும் கிருஷ்ணர். இவரை வழிபாடு செய்தால் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
முரளீதரன்:
கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
 மதனகோபாலன்:
புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது கலை துறையில் சிறந்து விளங்கலாம்.


பார்த்தசாரதி:
மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கீதை உபதேசித்த திருக்கோலம். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் தர்ம சிந்தனையும் வாழ்க்கையில் எதையும் சரியாக யோசித்து முடிவு எடுக்கும் திறனும் பிறக்கும்.   
சந்தான கோபால கிருஷ்ணன்:
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர். இந்த கோலத்தில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யும் பொழுது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
பாலகிருஷ்ணன்:
தவழும் கோலத்தில் கிருஷ்ணர். இந்த கோலத்தில் இருக்கும் கிருஷ்ணரின் படத்தை ஆலயங்களிலும் பலரது வீடுகளிலும் காணலாம். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது வீடுகளில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகிறது.
காளிய கிருஷ்ணன்:
காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் புரியும் காளிய கிருஷ்ணன். இந்த கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் சந்திக்கும் எதிர்ப்புகள் விலகி, மனதில் நம்பிக்கை உருவாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eight types Krishna worship If you follow these and worship them you reap benefits every day


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->