சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் புதிய வசதி.. வாட்ஸ்அப் எண் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் நிரம்பி வழியும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர்.

குறிப்பாக பாரதி நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். மேலும் தற்போது சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை மெட்ரோ ரயிலின் தற்போது டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் மூலம் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் வாட்ஸ்‌அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மெட்ரோ ரயில் நிறுவனம் '83000 86000' தனி வாட்ஸ்அப் எண் வழங்கியுள்ளது.

அந்த வகையில் '83000 86000' என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப் செயலியில் இருந்து ஹாய் என மெசேஜ் செய்வதன் மூலம் 'சார்ட் போட்' என்ற முறையில் டிக்கெட் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இதில் பயணிகள் தங்கள் புறப்படும் ரயில் நிலையத்தின் பெயர் செல்லும் ரயில் நிலையத்தின் பெயர் பதிவு செய்ய வேண்டும்.

 அதன் பிறகு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் ரயில் நிலையங்களில் உள்ள கியூஆர் ஸ்கேனரில் காண்பித்து எளிமையாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai metro ticket from whatsapp no introduce


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->