சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்: சிக்கிய மேலும் இரு  கடிதம்., ஆசிரியையின் மகன்.! - Seithipunal
Seithipunal


சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவிக்காம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பள்ளி மாணவி எழுதியுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இதுக்குமேல முடியாது, மனசு ரொம்ப வலிக்குது, செக்ஸ்வுவல் ஹரஸ்மெண்ட் முடியல., 

எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை., என்னால நிம்மதியா தூங்க முடியல., அந்த கனவு வந்து டார்ச்சர் பண்ணுது., படிக்க முடியல., பாதுகாப்பே இல்லை., இந்த கேடுகெட்ட சமூகத்தில் என்னோட கனவு எல்லாம் போயிடுச்சி., எவ்ளோ வழி எனக்குள். 

அனைத்து பெற்றோர்களும் உங்கள் குழந்தைகளுக்கும், மகன்களுக்கும் சொல்லி வளருங்கள். பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என்று.

எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். 
உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்ப கூடாது.
அம்மா போயிட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு., 
பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையில் தான்.
பள்ளி பாதுகாப்பானதாக இல்லை. உறவினர்களும், மற்றவர்களும் பாதுகாப்பானது இல்லை.
எனக்கு நியாயம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி மாணவி எழுதியுள்ள மேலும் ஒரு கடிதம் தற்போது போலீஸார் கையில் சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தை மாணவி எழுதிவிட்டு, பின்னர் சுக்கு நூறாகக் கிழித்துக் குப்பையில் வீசி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் அந்த மாணவி ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்ததாகவும், அந்த பள்ளியின் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து அவர் எழுதியுள்ளார். மேலும், அந்தப் பள்ளி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் மகன் தான் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிரியையின் மகனை சும்மா விடக்கூடாது என்றும் அந்த பள்ளி மாணவி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் தெரிவிக்கையில், என் மகள் ஏற்கனவே தனியார் பள்ளியில் பயின்றபோது, அந்த பள்ளி ஆசிரியையின் மகன்தான் அவன். அவனை நன்றாக எங்களுக்கு தெரியும். அந்த தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் தான், எனது மகளை பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தோம் என்று தெரிவித்தனர். எனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI MANGADU SCHOOL GIRL SUICIDE CASE ISSUE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->