மக்களின் உழைப்பை அரசே சுரண்டக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் ஜெயபால் மற்றும் மாரிமுத்து உள்ளிட்டோர் தங்களை ஓட்டுநர்களாக நியமனம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தனர். 

அந்த மனுவில் அவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கோவை மாநகராட்சி, குறைந்த ஊதியம் பெரும் தூய்மைப் பணியாளர்களான தங்களை ஓட்டுநர்களாகப் பயன்படுத்திவிட்டு, கல்வித் தகுதியை காரணம் காட்டி ஓட்டுநர்களாக நியமனம் செய்ய அரசு மறுக்கிறது" என்றுத் தெரிவித்துள்ளனர் 

இந்த நிலையில், இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம்,  "தூய்மைப் பணியாளர்களை அதிக வருமானம் உடைய ஓட்டுநர்களாக பயன்படுத்தியது, சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு ஒப்பானது.

அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும். அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயபால் மற்றும் மாரிமுத்து உள்ளிட்டோரை ஓட்டுநராக நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order to government should not exploit the labor of the people


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal