#நீலகிரி :: கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக "ஹெலிடூரிசம்" என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது என்றும், பறவைகள், வன விலங்குகளுக்கு பாதிப்பு நேரிடும் என்று உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதில், விலங்குகள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தினால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால் பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai high court Ban on helicopter tours during summer festival in nilgiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->