கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பாக்கி தொகையை வசூலிக்க கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
chennai HC oreder to interiam stay of collection balance amount to cable tv operaters case
கேபிள் ஆப்ரேட்டர்களிடம் பாக்கி தொகையை வசூலிக்க கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
மத்திய அரசு கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டத்தை கடந்த 2003 ஆம் ஆண்டுக் கொண்டு வந்தது. அதன் பின்னர், கடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. இந்த நடைமுறை, தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கு முன் கேபிள் ஆப்ரேட்டர்கள் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை என்றும் தற்போது அதை வசூலிக்கும் நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மற்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-lv5ph.jpg)
இந்த உத்தரவை அறிந்த, தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் மற்றும் சில உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்தும், வசூல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “எந்த நோட்டீசும் கொடுக்காமலும், எந்த ஆதாரங்களும் இல்லாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை தொலைத்தொடர்பு தகராறு தீர்ப்பாயத்தில் தான் எழுப்ப முடியும்" என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்த போது அவர், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் இருந்து 2017-ம் ஆண்டுக்கு முன் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
English Summary
chennai HC oreder to interiam stay of collection balance amount to cable tv operaters case