கணவர் இறந்த சில நாளில் 71 வயது பாட்டி அடித்துக் கொலை.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆவடி அருகே கோவர்த்தனகிரியில் பொதிகை நகரில் இருக்கும் இந்த பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி சாவித்திரியின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்துள்ளார்.  

சாவித்திரிக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சாவித்திரி மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில், இவருக்கு சொந்தமாக 3 வீடுகள் இருக்கின்றன. அந்த வீடுகளை சாவித்ரி வாடகைக்கு விட்டு இருக்கிறார்.

நேற்று அவரைக்காண அவரது பேரன் சென்றுள்ளார். அப்பொழுது சாவித்திரி ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு உயிரிழந்த கிடந்துள்ளார்.  இதை கண்டு அதிர்ந்த பேரன், உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் தகவலறிந்து , போலிசார் வந்து சாவித்திரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்காக பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின், கொள்ளை சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். மூதாட்டியை அடித்துக் கொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் இங்கிருப்பவர்கள் தான் யாரோ முன் விரோதத்தில் இப்படி செய்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. போலிசார் அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai gowarthanagiri old women death by murder


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->