"ஆளுநருக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட நாடகம்": முதல்வரைத் தாக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமி!
Stalin’s Pre planned Script EPS Slams DMK over Assembly Chaos and Lawlessness
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) செய்தியாளர்களைச் சந்தித்து திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திட்டமிட்டச் சதி: "ஆளுநர் எப்படி நடந்துகொள்வார் என்பது முன்கூட்டியே தெரிந்தால்தான் தீர்மானத்தைத் தயார் செய்ய முடியும். ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார்."
ஆளுநரின் நியாயம்: "அமைச்சரவை தயாரித்த உரையில் தவறுகள் இருப்பதால் அவற்றை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார். உண்மைத்தன்மை இல்லாத உரையை வாசிக்க முடியாது என்ற ஆளுநரின் நிலைப்பாட்டில் நியாயம் உள்ளது."
சீர்குலைந்த சட்டம்-ஒழுங்கு: "கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறிவிட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
மக்களின் பிரச்சினைகளைப் பேசவே நாங்கள் பேரவைக்கு வந்தோம்" என்று தெரிவித்த எடப்பாடியார், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய 'விடியா திமுக' அரசை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என எச்சரித்தார்.
English Summary
Stalin’s Pre planned Script EPS Slams DMK over Assembly Chaos and Lawlessness