மலக்குழி மரணம் ஏற்பட்டால், வீட்டின் உரிமையாளர், லாரியின் உரிமையாளர் 15 லட்சம் இழப்பீடு தரவேண்டும்!
Chennai Corporation announce new rule for malakuzhi maranam
சென்னை கழிவுநீர் லாரி இயக்குவோர் மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மனிதர்களை அபாயகரமாக அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பணியாளர் உயர் இழக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வீட்டின் உரிமையாளர், லாரியின் உரிமையாளர் ஆகியோரே, உயிரிழப்பு ஏற்பட்டால் இதற்கு பொறுப்பு. அவர்களே இந்த தொகையை வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
திறந்தவெளி, நீர் நிலைகளில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலைமையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக கூட்டரங்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
English Summary
Chennai Corporation announce new rule for malakuzhi maranam