உலக அரங்கையே அதிரவைத்து தமிழத்திற்கு பெருமை சேர்த்த சிறுவன்! புகழாரம் சூட்டிய ஏஆர் ரஹ்மான்.! - Seithipunal
Seithipunal


அண்மையில் அமெரிக்க நாட்டில் ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ ஒன்று நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். புகழ்பெற்ற இசை மேதைகள் பலர் நடுவர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் லிடியன் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார். 

முதலில் சாதாரணமாக வாசிக்க தொடங்கிய லிடியன்,சிறிது நேரத்தில் அதிவேகமாக வாசிக்க தொடங்கினார். சிறிதும் பிழையில்லாமல், துணிச்சலாகவும் விவேகமாகவும் வாசித்த லிடியனை கண்ட அனைவரும் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அதனை தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரனுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரு. 7 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 

 மேலும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக அதனைகண்ட பல பிரபலங்களும் ஆச்சரியமடைந்து அதனை தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து பாராட்டினர். 


இந்நிலையில், இன்று மாலை லிடியன் நாதஸ்வரத்துக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் கலந்து கொண்டு சிறுவனுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் லிடியன், சர்வதேச அளவில் இசை தூதராக வரவேண்டும் என்று பாராட்டினார். 


 

English Summary

chennai boy lidiyan nadaswaram win the world best award


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal