மழைக்காலங்களில் பெற்றோரே உஷார்.. தொட்டிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலியான சிறுவன்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆவடியை அடுத்துள்ள வெள்ளானூர் ஆர்ச் அந்தோணி நகர் பகுதியை சார்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 34). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (வயது 28). இவர்கள் இருவருக்கும் மோகன்ராஜ் என்ற 6 வயது மகனும், 2 மகள்களும் உள்ளனர். 

மோகன்ராஜ் வெள்ளானூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கமலக்கண்ணன் வீட்டிற்கு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைக்க, ஆறு அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. 

தற்போது தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக, பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. சிறுவன் மோகன் ராஜ் வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளார். 

நீரில் மூழ்கியபடி தத்தளித்ததை தொடர்ந்து, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கே வைத்த தாய் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சுதாரித்து, சிறுவனை மீட்டு ஆவடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுவனை சோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் மகனின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Avadi child died police Investigation 27 November 2020


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal