தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லை - சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுமியிடம் பெண் போலீசார் வாக்குமூலம் எடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

மிரட்டும் தோணியில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெண் போலீசார் வாக்குமூலம் என்ற பெயரில், ஏற்கனவே யாரோ சொன்னது போல, சொல்லி கொடுத்து பேச வைத்தது போல அவரா? இவரா? அவர்தானே? என்றெல்லாம் மாற்றி மாற்றி அந்த சிறுமியை அச்சப்படுத்தும் வகைகள் போலீசார் வாக்குமூலம் என்ற பெயரில் விசாரணை மேற்கொண்டது அந்த காணொளியின் மூலம் அம்பலமானது.

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்டது.

இன்று இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றது யார்? எங்கு வைத்து வாக்குமூலம் பெறப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

பெண் காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் வைத்து செல்போன் மூலம் வாக்குமூலம் பதிவு செய்ததாக காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

மேலும் உடனே வழக்குப்பதிவு செய்யவே மருத்துவமனையில் வைத்து வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து காவல்துறையின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர் 

மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Anna Nagar child abuse case CBI enquiry


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->