பேரன் போல நினைத்த முதியவருக்கு அரங்கேறிய சோகம்.. பப்ஜி, ஆன்லைன் ஆர்டர் என... அபேஸ் செய்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சார்ந்தவர் முருகேசன் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற மருத்துவர் ஆவார். இவரது வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் தங்கியிருந்துள்ள பெண்மணி, இவரை கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில், முருகேசன் தனது பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு செய்கையில், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.7 இலட்சம் மாயமாகி இருந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய முருகேசன், இது குறித்து விசாரணை செய்கையில் இணையத்தளம் மூலமாக பொருட்கள் வாங்கியுள்ளதும், பப்ஜி விளையாட்டிற்கு பணம் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

இதனால் விழிபிதுங்கிப்போன முருகேசன், அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஆகஸ்ட் மாதம் முதலாகவே பணம் திருடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விசாரணையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில், அந்த சிறுவன் பணத்தை திருடியது அம்பலமானது. மேலும், அந்த சிறுவன் முருகேசனை கவனித்து வந்த பெண்ணின் மகன் ஆவார்.

விசாரணையில், " முருகேசன் சிறுவனின் அலைபேசியை வைத்து இணையவழி வங்கியை உபயோகம் செய்த நிலையில், முருகேசனின் வங்கி தகவலை சேமித்து வைத்துக்கொண்டு இணையத்தில் பொருட்கள் வாங்கியதும், பப்ஜி விளையாட்டில் ரூ.6 இலட்சத்தை இழந்ததும் அம்பலமாகியுள்ளது. சிறுவனிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், தங்களின் வங்கிக்கணக்கு தகவலை யாருக்கும் தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Anna Nagar 17 year old youngster cheat 75 Age Retired Doctor Murugesan


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal