செங்கல்பட்டு | மாமியாரை கொலை செய்த மருமகன்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


மடிப்பாக்கம் அருகே மாமியாரை கழுத்து அறுத்து கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை!

செங்கல்பட்டு: மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாள்தோறும் ஆறுமுகம் மது அருந்தி விட்டு அவரது மனைவி கீதாவிடம் பிரச்சனை செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

அது போல கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறுமுகம் மது அருந்தி விட்டு கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீதா காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தாய் சித்ராவின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

இதனால் ஆறுமுகம் மாமியார் சித்ரா வீட்டிற்கு சென்று கீதாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியார் சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த ஆறுமுகம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் சித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அவரை தடுக்க முயன்ற மைத்துனர் உதயகுமாரை கொலை செய்ய முயன்றுள்ளார். 

இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அந்த வழக்கில் ஆறுமுகத்தின் மீது அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் செங்கல்பட்டு மகிளா நீதிமனறம், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chengalpattu son in law killed mother in law


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->