கோவையில் பாலஸ்தீன கொடியை பறக்க விட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு!!
Case registered against 3 people for flying Palestine flag in Coimbatore
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் இன்று வரை 19 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் சுமார் 8,000 மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் அமைப்பின் செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்ட கோழைகள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஆயத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையோடு இந்த போராட்டமானது நடைபெற்றது. இந்நிலையில் உக்கடம் ஆற்றுப்பாலத்தில் அருகே புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தப் பாலத்தின் மீது ஏறிய 3 பேர் பாலஸ்தீன கொடியை பறக்க விட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இஸ்லாமிக் இண்ட் அமைப்பைச் சேர்ந்த சபீர் அலி , மனிதநேயம் மக்கள் கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகிய 3 பேர் மீது உக்கடம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Case registered against 3 people for flying Palestine flag in Coimbatore