கரூர் || பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து நிதி நிறுவன ஊழியர்கள் அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள தாளியாபட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், காமராஜபுரத்தில் இயங்கி வரும் பாலு பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் 60,000 ரூபாய் கடன் பெற்று 10 சதவீத வட்டியும் செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடன் வாங்கிய நபருக்கு திடீரென வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினரால் சரிவர தவணை கட்ட முடியாததால், நிதி நிறுவனத்தினர் பணம் கட்ட சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கடன் பெற்ற நபர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் பணத்தை செலுத்த நிதி நிறுவனத்திடம் ஒரு மாத காலம் அவகாசம் பெற்றுத் தந்தனர். ஆனால், அந்த அவகாசமும் முடிந்ததால் நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நிதி நிறுவனத்தினர் கடந்த 28-ம் தேதி கடன் வாங்கிய நபரின் மனைவி பணி முடித்து மாலை வீடு திரும்பும் போது நடுரோட்டில் கையைப் பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றி நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்குதல் நடத்தி பாலியல் தொந்தரவும் செய்துள்ளனர். 

மேலும், அவரிடம் இருந்து தாலி சங்கிலி, செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு அந்தப் பெண்ணை துரத்தியுள்ளனர். உடனே அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்ற அந்தப் பெண் மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இதற்கிடையே போலீசார் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on two peoples for harassment in karoor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->