தீப்பற்றி எரிந்த கார்..உயிர் தப்பிய தம்பதி..நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த காரில் இருந்து சரியான நேரத்தில் காரை விட்டு வெளியேறியதால், கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி அப்துல் காதர் ,மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அவர்களது கார் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் இன்ஜினில் இருந்து புகை கிளம்பியிருக்கிறது.

இதைப் பார்த்து பயந்து போன அப்துல் காதர், கார் தாறுமாறாக திரும்பி சாலையின் ஓரம் நின்றது. இதையடுத்து கணவன், மனைவி இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. பின்னர் இருவரும் உடனடியாக காரில் இருந்து வெளியேறினர்.

அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் காரில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காரில் பெட்ரோல் முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் ஒருவழியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் காரை விட்டு வெளியேறியதால், கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர். சாலையின் நடுவே கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car engulfed in flames Couple narrowly escapes What happened?


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->