செங்கல்பட்டு அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி.!
Car accident in chengalpattu 3 mens death
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் என்ற இடத்தில் ராமநாதபுரத்தில் இருந்து கார் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. இந்த காரில் 3 ஆண்கள் பயணித்துள்ளனர்.

இந்த நண்டுகள் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 பள்ளத்தில் தலை குப்புற விழுந்து கொடூர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 ஆண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் விவரத்தை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Car accident in chengalpattu 3 mens death