#கன்னியாகுமரி || விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி மாவட்டத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நேற்று மாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரித்ததில் அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில், கோடியூரை சேர்ந்த மணிகண்டன், முகமாற்றூரை சேர்ந்த ரஞ்சித் மற்றும் பள்ளியாடி அருவிதோட்டம் பகுதியை சேர்ந்த வினித் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis sellers arrested in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->