ராமேஸ்வரம் || சாலையில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய பேருந்து - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் அருகே ராமேஸ்வரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து நேற்று மதியம் மதுரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று வெளியே வந்தது.

இதையடுத்து பேருந்தின் ஓட்டுநர் பணிமனைக்கு எதிரே உள்ள மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையோரம் பேருந்தை நிறுத்தி விட்டு தண்ணீர் குடிப்பதற்காக கீழே இறங்கியுள்ளார். அப்போது திடீரென சாலையில் ஓடிய பேருந்து, அந்தப் பகுதியில் இருந்த வீட்டின் மதில் சுவர் மேல் மோதி நின்றது.

இந்த விபத்தில், வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை மீட்டனர். இந்த விபத்தின்போது பேருந்திலும், வீட்டிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus run in road without driver in rameshwaram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->