கிருஷ்ணகிரியில் பரபரப்பு! முன்னாள் திமுக கவுன்சிலரின் மகனை காவு வாங்கிய பேருந்து எரிப்பு!
Bus parked at police station was set on fire in Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று இரவு தனியார் பள்ளி பேருந்து ஏற்படுத்திய விபத்தில் முன்னாள் திமுக கவுன்சிலர் அப்துல் சலாமின் மகன் சதாம் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார் தனியார் பள்ளி பேருந்தை கைப்பற்றி காவல் நிலையத்தின் அருகே நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை விபத்து ஏற்படுத்திய பேருந்துக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனர்.
இந்த பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது திமுகவினரா? அல்லது இஸ்லாமியர்களா? அல்லது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என வேறு யாரேனும் செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் இஸ்லாமியர் ஒருவர் இறந்ததற்கு பேருந்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bus parked at police station was set on fire in Krishnagiri