பள்ளியிலேயே நேர்ந்த கொடூரம்...! 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் அதிரடி கைது...!
brutal incident School van driver arrested harassing 6 year old girl under POCSO
கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது தாயார் பெங்களூருவில் வேலை செய்து வந்ததால், குழந்தை தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்ததால், சிறுமியின் தாயார் கோவைக்கு வந்து மகளை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது மகள் மிகவும் சோர்வாகவும் மனஅழுத்தத்துடனும் காணப்பட்டதை கவனித்த அவர், சந்தேகத்தின் பேரில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் உடலின் மறைவான பகுதியில் காயங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த தாயார் மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது பள்ளி முடிந்தவுடன் முதலில் வேனில் ஏறும் நேரங்களில், வேன் ஓட்டுநர் சாக்லெட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் சிறுமி கதறியபடி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர கிழக்கு மகளிர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் கணேசன் (43) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
brutal incident School van driver arrested harassing 6 year old girl under POCSO