நகைப்பிரியர்களுக்கு செம குட் நியூஸ்...! தொடர்ந்து சரிவிலேயே தங்கம் விலை... இன்றைய அதிரடி நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக கடும் ஏற்றத் தாழ்வுகள் தொடர்ச்சியாக நிலவி வருகின்றன. கடந்த 12-ந்தேதி சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்த தங்கம், அதற்கு அடுத்த நாளே இறக்குமதி வரி உயர்வு காரணமாக மீண்டும் அதிரடி விலை ஏற்றத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய வர்த்தகத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.670 உயர்ந்ததுடன், சவரனுக்கு ரூ.5,360 வரை அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் சவரனுக்கு ரூ.400 உயர்வு பதிவான நிலையில், தங்கம் விலை மேலும் பறக்கும் என நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் நேற்று தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி, ஒரு கிராமுக்கு ரூ.100 மற்றும் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், பிற்பகல் வர்த்தகத்தில் மேலும் ஒரு கிராமுக்கு ரூ.185 மற்றும் சவரனுக்கு ரூ.1,480 வரை விலை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு மொத்தம் ரூ.285 மற்றும் சவரனுக்கு ரூ.2,280 வரை சரிந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,765-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,120-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றிருப்பதே தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக டாலரின் மதிப்பு அதிகரிக்கும் சூழலில், பிற நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்கும் செலவு அதிகரிப்பதால் தங்கத்தின் தேவை குறையும். இதுவும் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதால், அங்கு வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், மாறாக மேலும் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை வங்கி முதலீடுகள் மற்றும் அரசுப் பத்திரங்கள் நோக்கி திருப்பியிருப்பதும் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலையில் சிறிய அளவிலான குறைவு பதிவாகியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.14,750-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.15 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news jewelers Gold prices continue fall What latest news today


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->