மக்களுக்கு குட் நியூஸ்! 'பொதுமக்களை நாற்காலியில் அமரவைத்துதான் பேச வேண்டும்' - பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறை மூலம் ஆவணப் பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் நகல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பொதுச்சேவைகள் மாநிலம் முழுவதும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறை தொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் விண்ணப்பங்களை சார் பதிவாளர்கள் அல்லது அலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களிடம் சமர்ப்பிக்க வரும் போது, அவர்களின் மேஜைக்கு முன்பாக கட்டாயமாக நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அலுவலரின் மேஜை முன்பும் குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் பொதுமக்களை அமர வைத்தே உரையாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களை நீண்ட நேரம் நிற்க வைத்தபடி அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை ஆலோசனைக் கூட்டங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பல அலுவலகங்களில் இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகங்கள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறைகள் மூலம் சார் பதிவாளர் அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றறிக்கையில் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பொதுமக்களை நிற்க வைத்தபடி நடத்தும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news people public seated chairs and spoken Deeds Registration Department issues dramatic order


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->