தவெக வட்டாரத்தில் பரபரப்பு...! வீட்டில் ரகசியமாக கஞ்சா செடி வளர்த்த அக்கட்சியின் ஆதரவாளர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும், போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் முதல்-அமைச்சர் விஜய் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற தருணத்திலேயே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையை அமைக்க உத்தரவிட்ட அவர், மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு சிறப்பு காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த இரண்டு முக்கிய திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தவெக ஆதரவாளராக அறியப்படும் எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் தனது வீட்டின் மாடிப்பகுதியில் கஞ்சா செடியை வளர்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது வீட்டின் பால்கனியில் சந்தேகத்திற்கிடமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த செடியிலிருந்து வீசிய வித்தியாசமான மணம் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் மேற்கொண்ட சோதனையில், வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கம்பக்கத்தினரின் பார்வைக்கு தெரியாமல் இருக்க அந்த செடியை துணியால் மூடி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கஞ்சா செடியை பறிமுதல் செய்த காவலர்கள், எட்வின் ராஜ் பிரண்டோவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் வீட்டின் பால்கனியிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தவெக கட்சியை நோக்கி கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There stir Tvk area supporter party who secretly grew cannabis plants home arrested


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->