கட்டும் போதே சரிந்து விழுந்த பாலம்! விருதுநகர் மக்களை அலறவிட்ட ஒப்பந்தாரர்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கட்டுமான பணியின் போது கான்கிரீட் பாலம் சரிந்து விழுந்த சம்பவம் பொதுமக்கள் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கூமாப்பட்டி பேருந்து நிலையம் அருகே புதிய பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அதன்படி பாலத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று பாலத்திற்கு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. பாலம் கட்டுமான பணிகள் அவசர கோளத்தில் நடைபெற்றதே இந்த விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்ற போதே இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bridge collapsed while being construction in viruthunagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->